தேனி அரசுப்போக்குவரத்து பணிமனையில் பல ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த வடிவேல் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில் இவருக்கான ஓய்வூதியப்பலன் தொகையினை பலமுறை விண்ணப்பித்தும் அலுவலர்கள் வழங்காமல் இருந்து வருவதாகக்கூறியும், தனக்கு சேர வேண்டிய 14 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தேனி போக்குவரத்து பணிமனை முன்பு தனி ஆளாக 'தரையில் பாய் விரித்து படுத்து' நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் (ஜூலை25) இன்று முதல் தினமும் தொடர் போராட்டத்தில் அவர் ஈடுபட உள்ளதாகவும் வடிவேல் தெரிவித்தார். தணக்குச்சேர வேண்டிய ஓய்வூதியப்பலன்கள் கிடைக்காத காரணத்தினால் தனது இரு மகள்களுக்குத் திருமணம் நடத்த முடியாமல் உள்ளதாக வேதனையுடன் வடிவேலு தெரிவித்தார்.
ஓய்வுபெற்றும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியப்பலன்களை வழங்காததைக்கண்டித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் பணிமனை முன்பு தரையில் படுத்து நூதனப்போராட்டம் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியைப்போல் திருவள்ளூரிலும் பள்ளி மாணவி மரணம்; காவலர்கள் குவிப்பு!