தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் காமு. இவர் 2017ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் உள்ள மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவ்வாறு அபராத தொகை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காமுவை காவல்துறையினர் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை - வீட்டுக்குள் பதுங்கிய கொலையாளி!