தேனி: கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி செய்த விஜயகுமார் தப்பிச் சென்றுள்ளார். போலீசார் குற்றவாளியை காவல்துறையினர் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விஜயகுமாரின் சொந்த ஊரான சாமாண்டிபுரத்தில் விஜயகுமாரை காவல்துறையினர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு உதவியாக சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த பிரபுதேவா மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேர் காவல்துறையினருக்கு உதவியாக விஜயகுமாரை தேடிச் சென்றுள்ளனர்.
தேடிச் சென்றவர்கள் முல்லைப் பெரியாற்றை கடந்து சென்று குற்றவாளியை தேடி உள்ளனர். அப்போது தேவா என்பவர் மாயமாகி உள்ளார். இதனால் மாயமான தேவாவை காவல்துறையினர் மற்றும் அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினரின் உதவியோடு தேடும் பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாற்றில் தண்ணீரினை முழுவதுமாக நிறுத்தி இன்று தேடும் பணியில் ஈடுபட்டபோது சுருளிப்பட்டியில் உள்ள வண்ணன்துறை பகுதியில் அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு உதவியாக குற்றவாளியை தேடிச் செல்லும் போது வாலிபர் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பட்ங்க: பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்.. தேனியில் நடந்தது என்ன?