தேனி: பேருந்தில் அரசு சீருடை அணிந்து போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகளில் ஒருவர் அரசு பேருந்து நடத்துனர் உடை அணிந்து ஏறினார்.
பின்னர் பேருந்து நடத்துனர்கள் வைத்திருக்கும் பையுடன் அதில் வைத்திருந்த டிக்கெட்களை பேருந்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனைப் பார்த்த அரசு பேருந்து நடத்துனர் அவரிடம் நீங்கள் யார் என தகவல்களை கேட்டுள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை பேருந்து நிலைய மேலாளரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தேனி அருகே காரில் கடத்திய உடல் உறுப்புகள்-நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை!
பேருந்து நிலைய மேலாளர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வேடியப்பன் என்பதும் போலி கண்டெக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, கம்பம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்த கம்பம் வடக்கு போலீசார் அவரிடம் இருந்த போலி டிக்கெட்டுகள் மற்றும் போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டக்டர் வேடம் அணிந்து ஒருவர் அரசு பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த சம்பவம் பேருந்து பயணிகளிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ’உள்ளத்தை அள்ளித்தா’ பட நடிகர் கவுண்டமணி பாணியில் அர்சு பேருந்து ஓட்டுநர் போல் வேடமணிந்து மக்களை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 400 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு தீவைப்பு.. தேனியில் நடந்தது என்ன?