ETV Bharat / state

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி - தேனி மக்கள் கடும் எதிர்ப்பு! - தேனி நியூட்ரினோ

தேனி: நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு, தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Neutrino
author img

By

Published : Jul 12, 2019, 11:47 PM IST

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பொட்டிபுரம் கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில், மத்திய அரசு பல்வேறு ஆய்வு செய்து இறுதியாக கடந்த 2010ஆம் ஆண்டு அப்பகுதியின் அம்பரப்பர் மலைப் பகுதியில் ஒற்றை பாறையிலான மலை அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முடிவு செய்தது.

இதற்காக ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து, முதற்கட்டமாக ஆய்வு மையம் அமைய இருக்கும் பகுதியை சுற்றி இரும்பு வேலிகள், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.

மத்திய அரசு இத்திட்டத்தை பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் சிறப்பு இடமாக அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடர்ந்து ஆய்வு மையம் அமைக்க தடை ஆணை பெற்றார். மேலும் தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதேபோல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2017 மார்ச் 20ஆம் தேதி இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து தற்போது மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மத்திய அணுசக்தி துறை, தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். அதில், தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையில் முடிவில் உள்ள ஒரு குகையில் இயற்கையாக நிகழும் வளிமண்டல நியூட்ரியன்களை கண்காணிக்க 51 ஆயிரம் டன் இரும்பு கலோரி மீட்டர் டிடெக்டர் அமைக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி - தேனி மக்கள் கடும் எதிர்ப்பு

மேலும், இத்திட்டத்தினால் அப்பகுதி மக்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியை சுற்றியுள்ள பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், தேனி மாவட்ட பொதுமக்கள் விவசாயிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட நியூட்ரினோ திட்டம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் அமைவதால் இயற்கை வளம் மிக்க பகுதி பாலைவனமாக மாறிவிடும். இதனால் தங்கள் பகுதி விளைநிலங்கள், கால்நடைகள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், வருங்கால சந்ததியினருக்கு ஆபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். மேலும் ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுவதால் இத்திட்டத்தை முழுமையாக தேனி மாவட்டத்தில் செயல்படுத்தக் கூடாது என தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு தற்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்த தீவிரம் காட்டிவருகின்றது.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான பொட்டிபுரத்தில் அமைய உள்ள இத்திட்டத்தை, அவர் தலையிட்டு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கு எதிராக விரைவில் போராட தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Intro: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி! மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசின் அறிவிப்பிற்கு, தேனி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு!.

Body: தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பொட்டிப்புரம் கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை சேர்ந்த இங்குள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் ஒற்றை பாறையிலான மலைப் பகுதியில் மட்டுமே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முடியும் என மத்திய அரசு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து இறுதியாக கடந்த 2010ஆம் ஆண்டு இவ்விடத்தை தேர்வு செய்தது. இதற்காக ரூபாய் ஆயிரத்து 500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து, முதற்கட்டமாக ஆய்வு மையம் அமைய இருக்கும் பகுதியை சுற்றி இரும்பு வேலிகள் மற்றும் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.
மத்திய அரசு இத்திட்டத்தை பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் சிறப்புத் இடமாக அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடர்ந்து ஆய்வு மையம் அமைக்க தடை ஆணை பெற்றார். மேலும் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2017 மார்ச் 20ஆம் தேதி இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து தற்போது மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய அணுசக்தி துறை ,தேனியில் நியூட்ரினோஆய்வு மையம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையில் முடிவில் உள்ள ஒரு குகையில் இயற்கையாக நிகழும் வளிமண்டல நியூட்ரியன்களை கண்காணிக்க 51 ஆயிரம் டன் இரும்பு கலோரி மீட்டர் டிடெக்டர் அமைக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் அப்பகுதி மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியை சுற்றியுள்ள பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்ட பொதுமக்கள் விவசாயிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட நியூட்ரினோ திட்டம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் அமைவதால் இயற்கை வளம் மிக்க பகுதி பாலைவனமாக மாறிவிடும். இதனால் தங்கள் பகுதி விளைநிலங்கள், கால்நடைகள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், வருங்கால சந்ததியினருக்கு ஆபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.
மேலும் ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுவதால் இத்திட்டத்தை முழுமையாக தேனி மாவட்டத்தில் செயல்படுத்தக் கூடாது என தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு தற்போது நியூட்ரினோ ஆய்வு மையதாதை தேனி மாவட்டத்தில் செயல்படுத்த தீவிரம் காட்டிவருகின்றது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான பொட்டிபுரத்தில் அமைய உள்ள இத்திட்டத்தை, அவர் தலையிட்டு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
இல்லையெனில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கு எதிராக விரைவில் போராட தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.

Conclusion: பேட்டி : 1) சரவணன் (விவசாயி - பொட்டிப்புரம்)
2) கருப்பையா (விவசாயி - இராமகிருஷ்ணாபுரம்)
3) அன்பழகன் (பொதுமக்கள் - இராமகிருஷ்ணாபுரம்)
4) போத்துக்காளை ( பொதுமக்கள் - பொட்டிப்புரம்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.