ETV Bharat / state

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள்: பணத்தை பெற்று தரக்கோரி ஆட்சியரிடம் மனு! - பணம் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள்

தேனி உத்தமபாளையம் அருகே மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது சேமிப்புத் தொகையை திரும்பப் பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று (செப்.21) ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்டோர்

author img

By

Published : Sep 21, 2020, 10:41 PM IST

Updated : Sep 21, 2020, 10:48 PM IST

தேனி: பணம் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக உதயம் பைனான்ஸ், உதயநிலா சிட்ஸ் (பி) லிட் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதன் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டாளியாக இருந்துவந்த அஜீஸ்கான் கடந்த ஜூலை மாதம் இறந்துவிட்டார். இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குதாரரான ஜமால்தீன் என்பவர் தற்போது அந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் பொதுமக்களின் வைப்புத்தொகைகளை, திரும்ப செலுத்த முடியாது எனக் கூறி தலைமறைவாகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது வைப்புத்தொகையை திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (செப்.21) சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்டோர்

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “கல்வி, திருமணம், தொழில் மூலதனம் உள்ளிட்ட எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சிறு சேமிப்பாக வைத்திருந்த பணத்தை நிதி நிறுவனத்தில் நம்பி முதலீடு செய்து வந்தோம். ஆனால், அப்பாவி பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கை மோசடி செய்ததால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இதுபோன்ற மோசடி கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது சேமிப்புத் தொகையை மீட்டுத் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி வரை மோசடி...பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு!

Last Updated : Sep 21, 2020, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.