ETV Bharat / state

ஓபிஎஸ் தொடங்கிய எரிமலை புரட்சி ஆக.20-க்குள் வெடிக்கும்: தேனியில் மருது அழகுராஜ் சூளுரை - புகழேந்தி

அதிமுகவில் 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் பதிவேட்டில் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகழேந்தி, மருது அழகுராஜ் தெரிவித்துள்ளனர்.

in Theni O Panneerselvam Supporters said the revolution started by OPS will break out in August 20
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி
author img

By

Published : Jul 17, 2023, 12:10 PM IST

புகழேந்தி, மருது அழகுராஜ் பேட்டி

தேனி: பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களான புகழேந்தி தலைமையில் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கூறுகையில், "அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தான் பதிவேட்டில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி தீர்மானத்தை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்பு புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஊடகங்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்ததோடு, இதனை உறுதிப்படுத்தியதால் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பதிவேட்டில் உள்ளதை கூறி மகிழ்ச்சி தெரிவித்ததாக" கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இனிமேல் எடப்பாடி பழனிசாமி கொடியை பற்றி பேசினால் பொடி பொடியாகி விடுவார். அதிமுக தொண்டர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டார்கள். கொடநாடு கொலை விஷயமாக ஓபிஎஸ் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் தொடரும் என அறிவித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் அஜந்தா படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம், என கூறும் நீங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு திமுகவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசுவதற்கு யோகிதை இல்லை, அதை பேசுவதற்கு ஓபிஎஸ்-க்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்களுக்கு தான் உள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருது அழகுராஜ் கூறுகையில், “கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவர் முழுமையாக உரிய காலம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எதுவும் இல்லை.

ஓபிஎஸ்-ஆல் அமைதியான எரிமலை புரட்சி துவங்கி உள்ளதாகவும் மிக விரைவில் வெடிக்கும், எடப்பாடி இல்லாத அண்ணா திமுக கரு கொண்டு உருவாக்கும். அது வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்குள்ளேயே நடந்து விடும். இதனை அடுத்து எடப்பாடியின் முகத்திரை கிழிந்து விடும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கவுதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.