ETV Bharat / state

அரசியல் களத்தில் இணைந்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: கூட்டாக தேனியில் போராட்டம்! - Kodanad murder case

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து இன்று தேனி மாவட்டத்தில் திமுகவை கண்டித்து ஆர்ப்பட்டம் நடத்தினர்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தேனி மாவட்டத்தில் போராட்டம்!

author img

By

Published : Aug 1, 2023, 4:40 PM IST

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தேனி மாவட்டத்தில் போராட்டம்!

தேனி: கோடநாடு கொலை வழக்கை கண்டித்து இன்று (01.08.2023) தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இரு அணியினரும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கோடநாடு கொலை வழக்கில் திமுகவின் மெத்தனப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து நடத்தும் முதல் கூட்டம் என்பதால், தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், ''அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. நான் பிறந்தது தஞ்சை என்றாலும் எனது அரசியல் மண் தேனி மாவட்டம் தான்.

அன்று அம்மாவோடு இருந்த தொண்டர்கள் இன்று 90 சதவீதம் பேர் எங்களோடு தான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் கோடநாடு கொலைக் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்னும் பிடிக்கவில்லை. ஓபிஎஸ் தொண்டர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் நமக்குள் இருக்கின்ற வருத்தங்களை எல்லாம் மறந்து இன்று ஒன்றிணைந்து இருக்கிறோம்.

கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்'' என அவர் கூறினார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “மூன்றே மாதங்களில் கோடநாடு குற்றவாளியைக் கண்டுபிடிப்பேன் என்று கூறிய ஸ்டாலின்.... 30 மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை. இன்னும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் தான் நடைபெற்று வருகிறது” என குற்றம்சாட்டினார். கொலை செய்தவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது என அவர் கூறினார்.

மேலும் அவர் இந்த ஆர்ப்பட்டம் தமிழகம் முழுவதும் அமமுக உடன் இணைந்து போராட்டமாக வெடிக்கும் என்று எச்சரித்தார். பின்னர் கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க மெத்தனப்போக்கில் செயல்படும் திமுகவை கண்டித்து ஓபிஎஸ் கோஷங்களை எழுப்பியதையடுத்து தொண்டர்களும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மணிப்பூர் வன்முறை:முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்; என்ன இருந்தது அந்த கடிதத்தில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.