ETV Bharat / state

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை... ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்... - sabarimala booking

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக "வெர்ச்சுவல் க்யூ" மூலம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
author img

By

Published : Oct 8, 2022, 6:27 PM IST

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை முதல் நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். டிசம்பர் 27ஆம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்.

2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும், பக்தர்கள் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.