ETV Bharat / state

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது! - கொலை

தேனி: கஞ்சா போதையில் மூதாட்டி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

murder
author img

By

Published : Jun 27, 2019, 4:05 PM IST

தேனி வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தையில் ஜூன் 22ஆம் தேதி மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பசை தடவி, வாய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இறுகிய நிலையில் சடலமாக கிடந்த அவரை, காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூதாட்டியின் பெயர் சாந்தியம்மாள் என்பதும் இவர் கணவனை பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த காவலர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை கைது செய்து விசாரித்தனர். ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மூதாட்டியின் மரணத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சம்பவ நாளன்று ஆட்டோ ஓட்டுநர்களான இருவரும் கஞ்சா போதையில் உழவர் சந்தை அருகே வந்தனர். அப்போது அங்கு சாந்தியம்மாள் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அவரை இருவரும் கூட்டாக பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

அவர் கூச்சலிடவே மணிகண்டன் பிடித்துக் கொள்ள, மோகன் ராஜ் கயிற்றால் இறுக்கியுள்ளார். இதில் சாந்தியம்மாளுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் நடந்த போராட்டத்தில் சாந்தியம்மாளுக்கு பின் தலையில் அடிபட்டதால் அவர் உயிரிழந்து விட்டார். என்று காவலர்கள் தெரிவித்தனர்.

கஞ்சா போதையில் மூதாட்டி என்றும் பாராமல் பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Intro:         தேனி உழவர்சந்தை அருகே மர்மமான முறையில் மரணமடைந்த மூதாட்டியின் வழக்கில் திருப்பம். கஞ்சா போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த ஆட்டோ டிரைவர்கள் இருவர் கைது.
Body:         தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள உழவர்ந்தையில் கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முகத்தில் பசை தடவி, வாய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இறுகிய நிலையில் சடலமாக கிடந்த அவர், தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி சாந்தியம்மாள்(58) எனத்தெரியவந்தது. கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வந்த இவர், உழவர் சந்தையில் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளார். இறந்த மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையாக இருக்கலாம் என சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
         விசாரணையில், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மோகன்ராஜ்(21), மணிகண்டன்(30) ஆகிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டியின் மரணத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ நாளன்று ஆட்டோ ஓட்டுநர்களான இருவரும் கஞ்சா போதையில் உழவர் சந்தை அருகே வந்தபோது சாந்தியம்மாள் அங்கு உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அவரை இருவரும் கூட்டாக பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அவர் கூச்சலிடவே மணிகண்டன் பிடித்துக் கொள்ள, மோகன் ராஜ் கயிற்றால் இறுக்கியுள்ளார். இதில் சாந்தியம்மாளுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் நடந்த போராட்டத்தில் சாந்தியம்மாளுக்கு பின் தலையில் அடிபட்டதால் அவர் உயிரிழந்து விட்டார். இவ்வாறு தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Conclusion: கஞ்சா போதையில் மூதாட்டி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.