ETV Bharat / state

’கருணாநிதியாலேயே முடியாதது ஸ்டாலினால் முடியவே முடியாது' - ஸ்டாலின்

தேனி: அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனவும், கருணாநிதியாலேயே முடியாதது ஸ்டாலினால் முடியவே முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ops
ops
author img

By

Published : Nov 20, 2020, 4:20 PM IST

Updated : Nov 20, 2020, 4:55 PM IST

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில், அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ” நமது இயக்கத்தில் இருந்து சிறிது காலத்திற்கு முன்பு வெளியேறிய ஒருவர் (தங்கத்தமிழ்ச்செல்வன்) நமது இயக்கத்தை அழித்துவிடுவேன் என பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பற்றி நான் இதுவரை எந்த கருத்தும் கூறியதில்லை. அதிமுகவை அழித்து விடுவேன் எனச் சொல்லும் அளவிற்கு அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு என்று பாருங்கள்.

இந்த இயக்கத்தை அழித்து விடலாம் எனக்கூறுபவர்களுக்கு, நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான், கருணாநிதியால் முடியவில்லை, ஸ்டாலினாலும் முடியாது. யாரானாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஜெயலலிதா கூறியது போன்று ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. அடுத்தும் அதிமுக ஆட்சிதான் மலரும் “ என்றார்.

’கருணாநிதியாலேயே முடியாதது ஸ்டாலினால் முடியவே முடியாது'

இக்கூட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினரும், ஓ.பி.எஸ்சின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் உள்பட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக!

Last Updated : Nov 20, 2020, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.