ETV Bharat / state

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன் - ஓ.பன்னீர்செல்வம் - theni news in tamil

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன்

author img

By

Published : Mar 12, 2021, 9:14 PM IST

தேனி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போடித் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை இன்று (மார்ச் 12) தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு அவர் கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, "கடந்த 2011ஆம் ஆண்டு முதன் முதலில் போடி தொகுதியில் போட்டியிட்டபோது மக்கள் என்னை அமோக வெற்றி பெறச் செய்தார்கள். தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்ததை நிறைவேற்றி அரசாணையாக வெளியிட்டுள்ளோம்.

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன்

எனது கடமையை சிறப்பாக ஆற்றியுள்ளதால் போடித் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். மக்களும் நல்ல ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக போடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன்" என்றார்.

இதையும் படிங்க: திமுகவில் இனைந்த கரூர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.