தேனி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அச்சன்கோயில் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயலில் பயிர் செய்துள்ள நெற்கதிர்கள் மற்றும் கேரளா மாநில பக்தர்கள் மற்றும் தமிழக பக்தர்கள் கொண்டு வரும் நெற்கதிர்கள் ஐயப்பனுக்கு சார்த்தப்பட்டு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.
நிறைபுத்தரிசி பூஜை நடத்தினால் நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். சபரிமலையில் இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜையையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
இதற்காக தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஊர்வலமாக சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. அதிகாலை கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
நிறைபுத்தரிசி பூஜைக்காக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கனமழையால் பம்பைநதியில் குளிக்கதடை, சுவாமி ஐயப்பன் பாதை வழியாக மட்டும் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: பெரியகுளம் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு