ETV Bharat / state

BSNL இணைப்பகம் திருட்டு -  வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட 2 பேர் கைது - தேனியில் மத்திய உளவுத்துறை

BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட 2 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர்.

என்ஐஏ
என்ஐஏ
author img

By

Published : Jul 10, 2022, 11:22 AM IST

தேனி: மத்திய உளவுத்துறை (NIA) அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி, அதிலிருந்து வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் (Satellite Phone) மூலம் தொடர்பு கொண்டும் பேசிய 2 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர்.

மத்திய உளவுத்துறை (NIA) அலுவலர்கள் நடத்திய சோதனையில் 2200 சிம் கார்டுகள் மற்றும் 35 சேட்டிலைட் ரிசீவர்கள் (Satellite Receiver Box) கைப்பற்றபட்டன. இதில் சம்பந்தபட்ட மேலும், 3 பேரை மத்திய உளவுத்துறை அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை அலுவலர்களுக்கு சமீபத்தில் முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் BSNL இணைப்பகத்தில் இருந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலமாக தனியார் சேட்டிலைட் போன் உதவியுடன் சிலர் தொலைபேசி இணைப்பகம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக இது குறித்து மத்திய உளவுத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தேனி BSNL இணைப்பகத்தில் இருந்து இந்த குற்றச் சம்பவங்களை நடந்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து சென்னை மற்றும் டெல்லியிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலர்கள் தேனி மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

இந்நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள பாப்பாம்மாள்புரம் மற்றும் தேனி காவல் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலகம் பகுதியிலுள்ள வீட்டில் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து, 2ஆயிரத்து 200 சிம் கார்டுகள் மற்றும் 35 சேட்டிலைட் ரிசீவர்களை மத்திய உளவுத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். இதில் மேலும், சம்பந்தபட்டவர்களில் தப்பியோடி 3 பேரை மத்திய உளவுதுறை அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்

இந்நிலையில் கைது செய்யபட்டவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிப் மற்றும் சஞ்ஜிர் முகம்மது என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 3 மாதங்களாக தேனி மற்றும் ஆண்டிபட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்கள் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது ஆன்லைன் மோசடி செயலுக்காக இந்த செயலில் ஈடுபட்டார்களா? BSNL தொழில் நுட்பங்களை வெளிநாட்டுகளுக்கு விற்பனை செய்ய இதனை பயன்படுத்தினார்களா? உள்ளிட்ட மத்திய உளவுத்துறை அலுவலர்கள் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய உளவுத்துறையின் விசாரணைக்கு பின்னர், தேனி காவல் துறையினர் இவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், மத்திய உளவுத்துறையினர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தியவர்கள் கைது

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர்.. தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.