தேனி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரிடமும் தேனியில் இன்று சிபிசிஐடியினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதித்சூர்யா கூறியதாவது, "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியில் தெரிந்து மாட்டிக்கொண்டதால், என் குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானது.
இதனால், நாங்கள் காவல்துறைக்கு பயந்து ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த வேளையில் என் தந்தை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதற்காக விஷஊசிகளை வாங்கினார். எனக்கு சாக விருப்பமில்லை, எனவே இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதனால் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது' இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'நீட் ஆள்மாறாட்ட வழக்கு; இடைத்தரகர் யாரும் கைது செய்யப்படவில்லை!'