ETV Bharat / state

நீட் தேர்வு வழக்கு: மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுடைய பெற்றோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, அவர்களை மீண்டும் நவம்பர் 21ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு வழக்கு
author img

By

Published : Nov 8, 2019, 9:12 PM IST

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பிறகு, இது குறித்த விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோர் பிணை கேட்டு மதுரை உயர்நீதின்றக் கிளையில் மனு செய்தனர். இவ்வழக்குகளில் தொடர்புடைய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கிய நீதிமன்றம், அவர்களின் பெற்றோருக்கு பிணை வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது.

நீட் தேர்வு வழக்கு: மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில் சிறையில் உள்ள மாணவர்களின் தந்தைகளான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகிய மூன்று பேரின் நீதிமன்றக் காவல் முடிந்து, மூன்றாவது முறையாக இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர் செல்வம், அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து, வரும் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதே வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, அவரது தாய் மைனாவதி ஆகியோர் செப்டம்பர் 12ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கிருஷ்ணகிரி மாணவி நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருடைய தாயார் மைனாவதி நீதிமன்றக் காவல் முடிந்து, இன்று பிற்பகல் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர் செல்வம், இவரது நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து வரும் நவம்பர் 21ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க:

நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்காவின் அம்மா மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
வரும் நவம்பர் 21-ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவு.Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக தேனி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள பாலாஜி, எஸ்ஆர்எம் ஆகிய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் அவர்களின் பெற்றோர் வெங்கடேஷன், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் புதிய திருப்பமாக மாணவி ஒருவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.
தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அர்ஜுனன் என்பவரது மகள் பிரியங்காவை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர். சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதி ஆகியோரை செப்டம்பர் 12ம் தேதி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ஜாமீன் மனுக்களை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா ஆகியோருக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சிறையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இன்று தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மாணவி பிரியங்காவின் அம்மா மைனாவதியின் நீதிமன்ற காவல் முடிந்து இன்று பிற்பகல் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் இவரது நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து வரும் நவம்பர் 21-ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.Conclusion: இதையடுத்து மைனாவதியை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.