ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: இருவருக்கு நீதிமன்ற காவல்!

author img

By

Published : Sep 29, 2019, 7:56 AM IST

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

neet Impersonation issues student praveen and his father was remanded 15 days

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ், மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர் பிரவின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சான்றளித்ததைத்தொடர்ந்து நேற்று இரவு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் பிரவின் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தகுந்த பாதுகாப்புடன் சிபிசிஐடி காவல் துறையினரால் தேனி மாவட்ட சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.

Intro: உதித்சூர்யாவை தொடர்ந்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிரவின் மற்றும் அவரது தந்தை சரவணனுக்கு 15நாள் நீதிமன்ற காவல்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 4மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ராகுல் மற்றும் அபிராமி ஆகியோரிடம் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர் பிரிவினின் உடல்நிலை பாதிப்படைந்ததாக தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சான்றிதழ் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இரவில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் பிரவின் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தகுந்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Conclusion: மேலும் விசாரணை நடைபெற்று வரும் மாணவர் ராகுல் மற்றும் மாணவி அபிராமி ஆகியோரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையை அடுத்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.