ETV Bharat / state

சங்கிலித் தொடராக உருமாறும் நீட் ஆள்மாறாட்ட விவகாரம் - cbcid seeking external affairs helps in neet

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மற்றொரு மாணவன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதால் சிபிசிஐடி வெளியுறவுத் துறையின் உதவியை நாடியுள்ளது.

neet impersonation issue cbcid seeking external affairs helps
author img

By

Published : Sep 28, 2019, 3:09 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு பேர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

இதில் மாணவன் ராகுலின் தந்தை டேவிட், பிரவீனின் தந்தை சரவணன் ஆகியோரை தற்போது தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவி அபிராமியின் தந்தை மாதவன் விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு மாணவன் இர்பான் சிபிசிஐடியின் விசாரணைகளுக்கு பயந்து மொரீசியஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பியோடிய மாணவன் இர்பானை விசாரணைக்காக இந்தியா கொண்டுவருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை உதவ வேண்டுமென சிபிசிஐடி கோரிக்கைவிடுத்துள்ளது.

இதனிடையே, மாணவர் உதித் சூர்யாவிற்கு உதவியதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் மீது கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தது பரபரப்பை அதிகரித்துள்ளார்.

Intro:*தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் படித்த மாணவியை ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு - மாணவிக்கு குவியும் பாராட்டு*Body:*தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் படித்த மாணவியை ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு - மாணவிக்கு குவியும் பாராட்டு*

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற செல்வி பிரேமலதா 2008 ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழக அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமை கல்வி வாய்ப்பு மிக ஆர்வத்தோடு பங்கு பெற்றுள்ளார்,

இந்நிலையில் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவி பிரேமலதாவை வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் பொதுக்கூட்டத்தில் மாணவி கலந்து கொண்டு மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பு குறித்த தலைப்பில் பேசியிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாணவிக்கு அழைப்பு வந்ததுள்ளது,

தமிழகத்தின் முதல் முறையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் ஐநா சபையில் உரையாற்ற இருப்பது தமிழக அளவில் மாணவிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.