தேனி: தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை போக்கி வருகிறது முல்லைப் பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அணையின் மொத்த அடியான 152 அடியில் 142 அடியை எட்டியது.
இதனால் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரள பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (டிச. 27) அறிவித்தனர். இன்றைய நிலவரப்படி முல்லைப் பெரியார் அணையில் நீர் இருப்பு 7,653 கன அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு 762 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 750 கன அடியாகவும் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: Corona Virus: நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை!