ETV Bharat / state

MullaPeriyar Dam:முல்லைப்பெரியாற்றில் புதிய அணை - ஓபிஎஸ் விளக்கம் - தேனி செய்திகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஒரு நதி மேலிருந்து கீழாக செல்கின்ற போது பாசனப்பகுதியாக இருக்கின்ற மாநிலத்தின் இசைவு பெற்றுத்தான் மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைக் கட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

MullaPeriyar Dam:முல்லைப் பெரியாற்றில் புதிய அணை- ஓபிஎஸ் விளக்கம்

author img

By

Published : Jan 15, 2023, 7:23 PM IST

MullaPeriyar Dam:முல்லைப் பெரியாற்றில் புதிய அணை- ஓபிஎஸ் விளக்கம்

தேனி: முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் 182வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்-ல் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், 'கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் தியாகத்தை நினைவுகூரும் விதமாக அவருக்கு லோயர் கேம்ப்-ல் மணிமண்டபம் அமைத்தது, தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.

மேலும் 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்ததும் ஜெயலலிதா தான். ஆனால், தீர்ப்பிற்கு பின் பேபி அணையை பலப்படுத்தவிடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தற்போதுள்ள திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ’பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஒரு நதி மேலிருந்து கீழாக செல்கின்றபோது பாசனப்பகுதியாக இருக்கின்ற மாநிலத்தின் இசைவு பெற்றுத்தான் மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைக் கட்ட வேண்டும்.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக மேல் புறத்தில் கேரள அரசால் புதிய அணை கட்ட முடியாது. அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசால் புதிய அணை கட்டமுடியாது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"அண்ணாமலை ஒரு கோமாளி": அமைச்சர் ராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.