ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை: மூன்று கால்வாய்களில் பாசன நீர் திறப்பு! - mulla periyar water level

தேனி: உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள மானாவாரி நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பி.டி. ராசன், தந்தை பெரியார், 18ஆம் கால்வாய்கள் வழியாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

mullai periyar dam water opening function
author img

By

Published : Oct 18, 2019, 5:07 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள மானாவாரி நிலங்களுக்கு ஆற்றுப்பாசனம் கிடைக்க வழியில்லாததால் மழையை மட்டுமே நம்பியுள்ளன. இந்த நிலங்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையின் தலைமதகிலிருந்து 40.80 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வெட்டி கூடலூர், கம்பம் பள்ளத்தாக்கு, பாளையம், தேவாரம் ஆகிய ஊர்களின் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரைக் கொண்டுசெல்லும் திட்டம்தான் 18ஆம் கால்வாய் திட்டம்.

அணையின் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் இந்தக் கால்வாய் வழியாக தண்ணீரைத் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் நீரால் உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள 44 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த சில வாரங்களாக பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் 18ஆம் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துமாறு கடந்த சில வாரங்களாக விவசாயிகள் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி வந்ததையடுத்து, இன்று காலை முதல் கால்வாயிலிருந்து தண்ணீரைத் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மதகை இயக்கி நீரைத் திறக்கும் காட்சி

இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாறு தலைமதகுப் பகுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மதகை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார். அரசின் உத்தரவுப்படி வினாடிக்கு 98 கனஅடி தண்ணீர் வீதம், இன்னும் ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) தண்ணீர் திறந்துவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், 18ஆம் கால்வாய் விவசாய சங்கத்தினர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், பி.டி. ராசன், தந்தை பெரியார் கால்வாய்களின் 5146 ஏக்கர் பாசன நிலங்களான சின்னமன்னூர், சீலையம்பட்டி , தர்மபுரி, கோவிந்தாநகரம் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து 100 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து வைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆக்கிரமிப்பு வழக்கு; கேரள அரசுக்கு நோட்டீஸ்!

Intro: கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் போடி தாலுகா பகுதி முதல் போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ஆர், தந்தை பெரியார் மற்றும் 18ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு.
மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.

Body: தேனிமாவட்டத்தில் உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள ஆற்றுப்பாசனம் கிடைக்க வழியில்லாத, மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில்
முல்லைப் பெரியாற்றின் தலைமதகிலிருந்து 40.80 கி.மீ கால்வாய் வெட்டி, கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு முல்லைப்பெரியாறு அணையின் உபரி நீரைக் கொண்டு செல்வதுதான் 18ஆம் கால்வாய் திட்டம்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும் தமிழக அரசு இந்த கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளது.
இக்கால்வாய் மூலம் வெளியேற்றும் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களிலும் நிரப்பி, அதன்மூலம் 4614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
கடந்த சில வாரங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த சில வாரங்களாக விவசாயிகள், அரசையும் அதிகாரிகளையும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை முதல் 18ஆம் கால்வாயிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப்பெரியாறு தலைமதகு பகுதியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
அரசு உத்தரவுப்படி வினாடிக்கு 98 கனஅடி தண்ணீர் வீதம் இன்று முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 18ஆம் கால்வாய் விவசாய சங்கம் தமிழக அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள பி.டி.ராசன் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் பாசன நிலங்கள் முல்லைப் பெரியாறு அணையின் பாசன நிலங்களாக ஒரு போக மற்றும் இருபோக பாசன நிலங்களாக உள்ளது.
இந்த ஆண்டு கிடைத்த மழையினால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 124.75 ஆக உள்ளதன் அடிப்படையில் பி.டி.ராசன் கால்வாய் தந்நைபெரியாறு கால்வாய் பாசன நிலங்களான 5146 ஏக்கர் நிலங்களுக்கு சின்னமன்னூர், சீலையம்பட்டி ,தர்மபுரி, கோவிந்தாநகரம் உள்ளிட்ட (12 கிராமங்களுக்கு) முல்லைப்பெரியாற்றில் இருந்து 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ அவர்கள் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்துவைத்தார்.
Conclusion: இந்நிகழ்ச்சியில் பி.டி.ராசன் கால்வாய் தந்தை பெரியாறு கால்வாய் விவசாய சங்கம் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.