ETV Bharat / state

திறக்கப்பட்டது முல்லைப்பெரியாறு அணை...உற்சாகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்! - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி: கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடிவீதம் நீர் திறந்து விடப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணை மதகை திறந்து வைத்தார்.

O.PANNEERSELVAM
author img

By

Published : Aug 29, 2019, 6:20 PM IST

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை நம்பி இருபோக சாகுபடி நடைபெற்று வரும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உண்டானது. இந்நிலையில், கடந்த மாதம் கேரளாவில் பெய்த கன மழையால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். தற்போது, இன்று தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் சுரங்கப்பாதை வழியாக தமிழ்நாடு பகுதிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார். மதகுப்பகுதியில் பூக்களை தூவி வழிபட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் முதல்போக சாகுபடிக்காக இன்று முதல் 120 நாட்களுக்கு 200 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் திறக்கப்பட்டது. ஆக மொத்தம் 300 கன அடி வீதம் விநாடிக்கு நீர் திறக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது. நீர்வரத்து 1,222 கன அடியாகவும், நீர் இருப்பு 4288 மி.கன அடியாகவும் உள்ளது.

அணை மதகை திறந்து வைக்கும் துணை முதலமைச்சர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு அங்குள்ள மரங்களை அகற்றுவதற்கு கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாற்றில் இதுவரை தண்ணீர் திருட்டே நடக்கவில்லை " என்றார்.

Intro: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக சாகுபடிக்காக துணை முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார்.

Body:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை நம்பி இருபோக சாகுபடி நடைபெற்று வரும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உண்டானது.
இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் சுரங்கப்பாதை வழியாக தமிழக பகுதிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மதகுப்பகுதியில் பூக்களை தூவி வழிபட்டு தண்ணீர் திறந்து வேண்டும் விடப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக சாகுபடிக்காக இன்று முதல் 120 நாட்களுக்கு 200கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக 100கன அடியும், ஆக மொத்தம் 300கன அடி வீதம் விநாடிக்கு திறக்கபடுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்128.10அடியாக உள்ளது. நீர்வரத்து 1222 கன அடியாகவும்நீர் இருப்பு 4288 மி.கன அடியாகவும் உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், முல்லை பெரியாறு அணையில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு அங்குள்ள மரங்களை அகற்றுவதற்கு கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பேபி அணையை பலப்படுத்திய பின் 152அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லை பெரியாறு அணையின் வழித்தடத்தில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு முல்லை பெரியாற்றில் இதுவரை தண்ணீர் திருட்டு என்பதே கிடையாது என பதிலளித்தார்
மேலும் வைகை அணையை தூர்வருவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது அதற்கு அடுத்த படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Conclusion: இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. எம்.பி.ரவீந்திரநாத்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் ( துணை முதல்வர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.