ETV Bharat / state

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது

author img

By

Published : Jul 17, 2022, 10:00 AM IST

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிமாகி, நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியுள்ளது. இதனால், இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜுக்கு முதல் எச்சரிக்கை தகவலை தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் அனுப்பியுள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 135.4 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜுக்கு முதல் எச்சரிக்கை (First Warning) தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் தகவலை அனுப்பியுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், மத்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மழை எச்சரிக்கை தொடர்கிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மேல், எல்லை மட்டமாக 136.30 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஜூலை 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை, மேல் எல்லை மட்டம் 136.60 அடியை எட்டும். பெரியாற்றின் இரு கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகமாகி கேரள பகுதி ஷட்டர்களை திறக்க வேண்டும் என்றால், மஞ்சுமலை கிராம அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் சிறப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் தொலைபேசி எண்: 04869-253362; அலைபேசி: 8547612910.

தாலுகா கட்டுப்பாட்டு எண்: 04869-232077; அலைபேசி: 9447023597 ஆகிய எண்களில் பொதுமக்கள் அவசர காலங்களில் தொடர்புகொள்ளலாம். இதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்படுமா? அதில் உள்ள சிக்கல்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.