கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கிறது.
2014ஆம் ஆண்டு இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அணையைக் கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். இதனையடுத்து மத்திய துணைக் குழுவினர் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இதற்காக தமிழ்நாடு அலுவலர்கள் பொதுப்பணித்துறை படகிலும் கேரளா அலுவலர்கள் கேரள வனத்துறையினரின் படகிலும் சென்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து இக்குழுவினர் இன்று மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இதில் அணை ஆய்வு குறித்த விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு, அது குறித்த அறிக்கை மூவர் கண்காணிப்புக் குழு தலைவரான குல்சன் ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: