கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு குறைவதற்குள், அடுத்ததாக கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாவட்டங்களில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை அம்மாநில அரசு பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தமிழக–கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தேனி வழியாக தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. போடி மெட்டு, கம்பம் மெட்டு ஆகிய மலைச்சாலைகள் வழியாக தேனி மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை உள்ளிட்டவற்றை தமிழகத்திற்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து சரக்கு வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. இது தவிர கால்நடைத்துறை சார்பில், பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு எல்லைப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாடு - கேரள எல்லையில் தீவிர சோதனை