ETV Bharat / state

மேகமலை–ஹைவேவிஸ் மலைச்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

author img

By

Published : Nov 19, 2020, 5:40 PM IST

தேனி: கனமழை காரணமாக மேகமலை - ஹைவேவிஸ் மலைச்சாலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

landslide
landslide

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, மணலாறு, மகராஜாமெட்டு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னமனூர், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்குத்தான் வந்துசெல்ல வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக மேகமலை இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகையும் அதிகளவில் இருக்கும். இதற்காக சின்னமனூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் ஒற்றை மலைச்சாலையைத் தான் அனைவரும் பயன்படுத்திவருகின்றனர்.

landslide
மலைச்சாலையில் நிலச்சரிவு

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையினால் இந்த மலைச்சாலையில் ஆங்காங்கே சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மலைகளில் இருந்த பாறைகள் உருண்டு விழுந்தும், மரங்கள் முறிந்தும் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

landslide
மலைச்சாலையில் முறிந்து விழுந்த மரம்

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மீட்புப் பணிகள் காரணமாக மேகமலை பகுதிக்கான போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.