ETV Bharat / state

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பல சர்ச்சைகள் வெடிப்பு..! - மகேந்திரனை மாற்றப்பட்டது மேலும் சர்ச்சை

சிறுத்தை உயிரிழந்த விவகாரம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், தேனி மாவட்ட உதவி வன அலுவலர் மகேந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பல சர்ச்சைகள் வெடிப்பு

author img

By

Published : Nov 1, 2022, 6:39 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கோம்பை பகுதியில் கடந்த மாதம் சோலார் மின்வேலியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையைக் காப்பாற்றுவதற்காகத் தேனி மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் சென்ற நிலையில் மகேந்திரனைத் தாக்கி விட்டு சிறுத்தை தப்பி ஓடியது.

இதில் மகேந்திரன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் அதே இடத்தில் சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.

தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ரவீந்திரநாத் மேலாளர்கள் இருவரையும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தேனி மாவட்ட உதவி வன அலுவலர் மகேந்திரன் மீது சர்ச்சைகள் குவிந்த வண்ணம்: இந்த விவகாரம் தற்போது பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பி வரும் சூழலில் சிறுத்தையை மின்வேலியில் இருந்து காப்பாற்ற முயன்ற போது உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனுக்கு ஏற்பட்ட காயங்கள் பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் இதற்கு உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இது தொடர்பான விசாரணைக்குத் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் ஆஜராக வேண்டுமென வனத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இன்று வரை வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்த சூழலில் உதவி பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் பணி மாற்றம் செய்யப்பட்டு தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மகேந்திரனுக்குப் பதிலாக ஷர்மிலி என்பவர் தேனி மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தை விவகாரம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வரும் சூழலில் தேனி மாவட்ட உதவி வன அலுவலர் மகேந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல ஆட்டுக்கிடை அமைத்தவர் மீது கடும் தாக்குதல் நடத்திய தேனி வனவர் ரமேஷ் பாபு, மற்றும் தேனி வனச் சரக அலுவலர் செந்தில்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி முழு உண்மையையும் வெளி கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:நீதிமன்ற அறிக்கைகளில் அலுவலர்கள் கையெழுத்து இல்லை என்றால் நடவடிக்கை - எச்சரித்த நீதிபதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.