தேனி: மாண்டஸ் புயல் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்புக் கருதி குளிக்கத் தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரையைக் கடந்தது மாண்டஸ் - சென்னையில் கோர தாண்டவம்