ETV Bharat / state

'சாதி மோதல்களைத் தூண்டும் மாமன்னன் படத்தை தடை செய்' - தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

தேனியில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 26, 2023, 12:39 PM IST

தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தேனி: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், மாமன்னன். இந்தத் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. திரைத் துறையில் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாமன்னன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், ”மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் படம் தான். அந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு நிறைய வலி, மனப்பிறழ்வு, பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்து உணர்வுகளும் ஏற்பட்டன.

படம் பார்த்த பின்னர் அந்த நாளை என்னால் கடந்து போக முடியவில்லை. அந்தப் படத்தை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கதாபாத்திரம் தான் இப்படத்தில் 'மாமன்னன்'. இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படம்' எனக் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தன.

இந்தச் சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் “தேவர் மகன் இசக்கி தான் மாமன்னன் படம் என்று நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டார்கள். இரண்டு படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மாமன்னன் படத்தில் வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து தான் நடிக்க வைத்தேன். மற்றபடி தேவர் மகனுக்கும் மாமன்னனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' எனக் கூறினார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் பேச்சுக்கு சிலர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், தேனி நகரில் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக, போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சாதி மோதல்களை மாமன்னன் திரைப்படம் உருவாக்குகிறது என்றும், எனவே அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. மேலும் ’போராடத் தூண்டாதே’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் தேனி நகரில் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு; மழை வேண்டி மூன்று மதத்தவரும் இறைவழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.