தேனி: கூடலூரில் உள்ள ஒக்கலிகர் காப்பு லாபேதார் குல தயாதிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ நாகவள்ளி ஸ்ரீ போலஜ்ஜியம்மன் திருக்கோயிலில் இன்று (செப்.9) மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரால், பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, ஸ்ரீ நாகவள்ளி ஸ்ரீ போலஜ்ஜியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இதில் கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதைத்தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ரஷ்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், உள்ளிட்டவைகளும் முதல் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாளாக கோ பூஜை, பிம்பசுத்தி, இரண்டாம் கால யாக பூஜை, மகாபூர்ணகுதி உள்ளிட்டவை நடத்தப்பட்டு யாத்திர தானம் புறப்பாடு நடைபெற்றது.
இதையும் படிங்க: கேரள மாணவிகளின் "சம்மக் சல்லோ" ஓணம்... க்யூட் டான்ஸ்...