ETV Bharat / state

யாருடைய விடுதலைக்காகவோ ஓ.பி.எஸ் காத்திருப்பதுபோல் தெரிகிறது - கமல் ஹாசன் - Looks like OPS is waiting for someone's release

தேனி : ஆட்சியில் பெண்களுக்கு சரிசமமாக பங்கு வழங்கவேண்டுமென ஓ.பி.எஸ் கூறியது யாருடைய விடுதலைக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Looks like OPS is waiting for someone's release
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்
author img

By

Published : Dec 14, 2020, 10:32 PM IST

தமிழ்நாடு முழுவதும் ‘வியூகம் 2021’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்திற்கு இன்று (டிச.14) வருகை தந்த அவருக்கு ஆண்டிபட்டி அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “பல வேலைகளை திறன்பட செய்யும் திறன் படைத்தவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அம்மா, தங்கை, மனைவி, பாட்டி, தோழி என நம் வாழ்வில் எத்தனையோ பாத்திரங்களில் பங்கு பெறுகிறார்கள். மேம்படுத்துகிறார்கள். பெண்களை நான் தனித்திறன் படைத்த சாதனையாளர்களாக பார்க்கிறேன். இது போன்ற சாதனையாளர்களுக்கு பொதுவான பெயர் அம்மா என்று கூறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கூறியபோது கேலி செய்து கொக்கரித்தார்கள். ஆனால் மேலை நாடுகளில் இது குறித்து இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதனை கண்டுபிடித்தோம் என சொல்லவில்லை. உலகத்தில் உள்ள தாயை வழிபடும் நேர்மையான ஆண்கள் எல்லாம் இதைப்பற்றி யோசித்திருக்கிறார்கள், நாங்கள் அதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அதனை செயல்படுத்தும்.

கடந்த 1957ஆம் ஆண்டில் காமராஜர் ஆட்சியில் லூர்தம்மாள் சைமன் என்ற பெண் அமைச்சர் சிறப்பாக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வெறும் 4 பெண் அமைச்சர்கள்தான் பதவியில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 3.1 கோடி ஆண் வாக்காளர்களும், 3.9 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்கிறார்கள். பெண்கள் நினைத்தால் ஆட்சி மாறும். மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு சம பங்கு அளிக்கும். குறைந்தது 20 பெண் அமைச்சர்களாவது பதவி வகிப்பார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம்.

கை குழந்தைகளுடன் பெண்கள் அதிகளவில் நமது கூட்டத்தில்தான் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் நிறைவில் அங்கிருக்கும் குப்பைகளை, தானே சேகரித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்வார்கள். கூட்டத்திற்கே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சுத்தம் செய்வார்கள்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், இரண்டரை ஆண்டுகள் ஆண் ஆள்வார்கள், இரண்டரை ஆண்டுகள் பெண் ஆள்வார்கள் என்று கூறினார். அந்த ஆழ்வார்களெல்லாம் இருக்கட்டும். இப்போதுகூட அவரது கட்சிக்கு பொதுச்செயலாளராக ஐந்து பெண்களை நியமிக்கலாமே. எங்கள் கட்சியில் உள்ளதைப் போல பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்

ஒரு வேளை அவர் வேறு யாருடைய விடுதலைக்காக காத்திருக்கிறேன் என்பதைத்தான் அப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன். மேலும், பாலின வித்தியாசம் இல்லாமல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். அப்பா எம்.எல்.ஏ.,வாகவும், மகன் எம்.பி.,யாகவும் இருக்கும்போது, அங்கு பெண்களுக்கு எப்படி வழி கிடைக்கும். அவர்கள் எங்கே வழி விடப்போகிறார்கள்.

பெண்களின் மனதை மாற்றுவதற்காக இங்கு நான் வரவில்லை. தமிழ்நாட்டின் மனதை மாற்றுவதற்காகதான் நான் இங்கு வந்திருக்கிறேன். அந்த மாற்றத்திற்கான சாயல் தெரிகிறது” என்றார்.

இதையும் படிங்க : 2021 சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.