ETV Bharat / state

16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: சட்டக்கல்லூரி மாணவன் மீது பாய்ந்த போக்சோ! - தேனி மாவட்டச் செய்திகள்

தேனி: உத்தமபாளையம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த சட்டக்கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

சட்டக்கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

author img

By

Published : Dec 7, 2020, 6:39 AM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா களிமேட்டுப்பட்டி அருகே உள்ள சூரியநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் யோகேஷ் (24).

மதுரை சட்டக்கல்லூரியில் படித்துவரும் இவர், அதே பகுதியில் வசிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 16 வயதுடைய 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து பழகிவந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் கேரள மாநிலம் அடிமாலியில் தங்கி கூலி வேலை செய்துவரும் நிலையில், அவரது பாட்டி - தாத்தா வீட்டில் தனது தம்பியுடன் வசித்துவந்தவரை யோகேஷ் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வண்புணர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் அடைந்ததை அறிந்த பெற்றோர் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் யோகேஷ் மீது போக்சோ மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.