தேனி மாவட்டம், பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகின.
இதில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, தென்னை மரங்கள் சேதமடைந்தன. ஊரடங்கு உத்தரவால் ஏற்கனவே இவர்கள் வருமானமின்றி, கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் இருந்தும் உரிய விலையின்றி வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இயற்கை சீற்றத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமடைந்தது, அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா - சிவப்பு மண்டலத்திற்கு மாறிய அரியலூர்