ETV Bharat / state

வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சியால் ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!

தேனி: அதிகப்படியான விளைச்சல், விற்பனைக்கு வாய்ப்பில்லாத நிலை மற்றும் தீபாவளி பண்டிகை அதனையொட்டி வந்த தொடர் விடுமுறையால், வெண்டைக்காய் விற்பனை முடங்கியது. இதனால், விற்பனையாகாத வெண்டைக்காய்களை விவசாயிகள் ஆற்றில் கொட்டி அழித்தனர்.

author img

By

Published : Nov 18, 2020, 6:01 PM IST

lady finger
lady finger

தேனி மாவட்டத்தில் அரண்மனைப் புதூர், கோட்டைப்பட்டி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி, கோட்டூர் மற்றும் சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200ஏக்கருக்கு மேலான பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. 45 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் குறுகிய கால பயிர் என்பதால் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதனிடையே, தீபாவளி பண்டிகை நேரத்தில் சராசரியாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையான வெண்டைக்காய்க்கு தற்போது போதிய விலை கிடைக்காததால் அதனை கொள்முதல் செய்த வியாபாரிகள் சந்தைகளில் இருப்பு வைக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஏல சந்தையில் தேக்கமடைந்த சுமார் 7டன் வெண்டைக்காய்களை வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் கொட்டினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தகவலறிந்த தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆய்வு செய்து, வியாபாரிகளிடம் விசாரித்தனர். இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாண்டியன் கூறுகையில், "விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவும், இங்கு விளையும் வெண்டைக்காய்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக தோட்டக்கலைத் துறை மூலமாக எடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், அண்டை மாநிலமான கேரளாவை நம்பியே தேனி மாவட்ட விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஒணம் பண்டிகை காலத்தில் ஒரு கிலோ வெண்டைக்காய் கிலோ நூறு ரூபாய் வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் அதிகபடி சாகுபடியில் ஈடுபட்டதால் வரத்து அதிகரித்தது.

தொடர் விடுமுறையால், வெண்டைக்காய் விற்பனை முடங்கியது

தீபாவளி பண்டிகை அதனையொட்டி வந்த தொடர் விடுமுறையால் தேக்கமடைந்த வெண்டைக்காய்களை யாரும் வாங்க இயலாததால் கெட்டுப்போகும் சூழல் உண்டானது. இதனால், தேக்கமடைந்த வெண்டைக்காய்களை குப்பைகளிலும், ஆற்றிலும் கொட்டி அழித்ததாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.