தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், நால்புறமும் இயற்கை எழில் சூழப்பட்ட இந்த அருவியில் விழுகின்ற நீரானது, குளிர்ச்சியாகவும், மூலிகைத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து குளித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. தொடர்ந்து அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கும், அங்கு குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பிறகு தடை விலக்கிக்கொள்ளப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : '3 நாட்களுக்கு 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!