ETV Bharat / state

Kuchanur சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு! - சனீஸ்வர பகவான் கோயில்

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 12:46 PM IST

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழா

தேனி: சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருவாதலும், திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளிலும் கோலாகலமாக திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 22) ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோயில் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பலர் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை அறிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டீக்கடை, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்டப் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: தேனியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, லேபிள் ஒட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரிய அனுமதி பெற்று உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளான சுரேஷ் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முறையாக விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததோடு தரமற்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Theni - தேனி பொதுமக்களைக் கவர்ந்த புல்லட் அம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.