ETV Bharat / state

’மோடியை எதிர்க்க தைரியமில்லாதவர் தமிழ்நாடு முதலமைச்சர்’

author img

By

Published : Oct 19, 2020, 7:14 PM IST

தேனி: மாநில உரிமைகளளைப் பறிக்கும் மோடியை எதிர்க்க தைரியமில்லாமல் கை கட்டி, வாய் மூடி தமிழ்நாடு முதலமைச்சர் குற்றேவல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks-alagiri
ks-alagiri

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் இன்று (அக். 19) இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உழவன் உரிமை மீட்பு மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தேனி வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ஜவஹர்லால் நேருவின் முதல் ஐந்தாண்டு திட்டமே விவசாயிகளுக்கான திட்டம் தான். ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுத் தேவையை அமெரிக்கா பூர்த்தி செய்துவந்த நிலையில், இந்திராகாந்தியின் சீரிய முயற்சியால் ஏற்பட்ட பசுமை புரட்சிக்குப் பிறகு இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகரித்து உணவுக் கிடங்குகளில் நெல், கோதுமைகள் எல்லாம் அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்டன.

இன்றைக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புகிற அளவுக்கு உணவு உற்பத்தியில் வளர்ந்திருப்பற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். ஆனால் இந்த வளர்ச்சியை துவம்சம் செய்கின்ற அளவில் மோடி அரசு, புதிய வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. எப்படி பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்ததோ, ஜிஎஸ்டியால் இந்திய வியாபாரம் வீழ்ச்சி அடைந்ததோ, அது போல புதிய வேளாண் சட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும் சூழல் உள்ளதால் இதனை எதிர்க்கின்றோம்.

பொது கொள்முதல், பொது விநியோக முறை, குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஆகியவைகள் தான் காங்கிரஸின் விவசாயக் கொள்கையாக இருந்தது. பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயமாகக் கருதப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு நேரு பாடுபட்டார். ஆனால் மோடியோ அதனை அழித்துவருகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவை வழங்காமல் ஜியோவிற்கு அனுமதி அளித்ததால் இன்றைக்கு பிஎஸ்என்எல் அழிந்துவருகின்றது. பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி அழிந்து வருகிறதோ அதுபோல புதிய வேளாண் சட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ், பாஜகவின் விவசாய அமைப்புகள் உள்ளிட்டோரும் புதிய வேளாண் சட்டத்தை எதிர்க்கும் நிலையில், மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தில் கை வைத்து மாநில உரிமையைப் பறிக்கும் மோடியை எதிர்க்க தைரியம் இல்லாமல் கூனிக்குறுகி, கைகட்டி, வாய்மூடி குற்றேவல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தன்னை ஒரு விவசாயி எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை ஆதிரிக்கிறார். மாநிலப் பட்டியலில் விவசாயம் இருந்தாலும், மத்திய பட்டியலில் வியாபாரம் இருப்பதால் நெல், கோதுமை போன்றவைகளின் வியாபாரத்திற்காகத்தான் மத்திய அரசு இந்தப் புதிய வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளதாக மோடியே சொல்லாத ஒரு புதிய விளக்கத்தை சொல்கிறார் எடப்பாடி.

மாநில உரிமைகள் பறிப் போகிறதை எதிர்த்து தான் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்வாதிகார போக்குடன் அனுமதி மறுத்துள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த கேஎஸ் அழகிரி

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவர் கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி தொடர்பாக பேசலாம்” எனப் பதிலளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து பொன்னார் கூறிய கருத்திற்கு, அது மன அழுத்தத்தால் கூறியிருக்கலாம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

இதையும் படிங்க:அழகிரி கைதை கண்டித்து கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.