தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம், ஸ்ரீரெங்கபுரம், வெங்கடாசலபுரம், குப்பிநாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கோவங்காய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகின்ற கோவங்காய் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக தேனி மாவட்ட விவசாயிகள் ஆண்டு தோறும் கோவங்காய் சாகுபடியில் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விளைவித்த கோவங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர். விதையாக நடவு செய்யப்பட்டு, பின் கொடியாகப் படர்ந்து 12 மாதங்கள் வரை வளரும் கோவங்காய்ங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்று விலை ஏற்ற இறக்கங்கள், விளைச்சல் பாதிப்பு போன்றவைகளை சமாளிப்பதற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: காஞ்சிபுரத்தில் 3 பேர் கைது