ETV Bharat / state

தேக்கடியில் நாட்டு துப்பாக்கி கடத்திவந்த 2 பேர் கைது - நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

தேனி: தேக்கடி அருகே காரில் நாட்டு துப்பாக்கி கடத்தி வந்த 2 நபர்களை கேரள வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
author img

By

Published : Oct 5, 2020, 10:44 PM IST

தமிழ்நாடு – கேரளா எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டின் மேகமலை வன உயரின சரணாலயமும் கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகமும் உள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பதாகவும், அதன் மூலம் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் கேரளா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தேக்கடி வனச்சரகர் அஜித்குமார், சிறப்பு வன அலுவலர்கள் ராஜீவ், ஜோஸ்மாத்யூ ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவின் ஆனவிலாசம் அருகே வாகன தணிக்கை செய்யும்போது, குமுளி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் குமுளி அருகே உள்ள உப்புத்துறையைச் சேர்ந்த முருகன் (33) எனத் தெரியவந்தது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சநீஷ் (29) என்பவர் தன்னிடம் நாட்டுத்துப்பாக்கியை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த தேக்கடி வனத்துறையினர் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது, வன விலங்குகள் ஏதும் வேட்டையாடப்பட்டதா என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.