ETV Bharat / state

கேரளா செல்லும் ஜீப் ஓட்டுநர்கள் இதை கவனிக்கவும்!

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு தோட்ட வேலைக்குச் செல்லும் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் கூலி வேலை ஆட்களுக்கு கம்பம் போக்குவரத்து காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கேரளா செல்லும் ஜீப் ஓட்டுனர்களுக்கு - தமிழக காவல்துறை கொடுக்கும் அட்வைஸ் !

author img

By

Published : Aug 16, 2023, 4:48 PM IST

கேரளா செல்லும் ஜீப் ஓட்டுனர்களுக்கு - தமிழக காவல்துறை கொடுக்கும் அட்வைஸ் !

தேனி: தமிழக-கேரள எல்லை மாவட்டமானது, தேனி மாவட்டம். இந்த மாவட்டத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் கேரள மாநிலத்திற்கு வேலைக்காக சென்று திரும்புகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைகளுக்கு தமிழகத்திலிருந்தே வேலையாட்கள் சென்று திரும்புகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து தோட்ட வேலைக்கு பணியாட்களை ஏற்றச் சென்ற ஜீப் ஓட்டுநரை கேரளாவைச் சேர்ந்த சிலர் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழக மக்களிடையே மிகுந்த கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 15) கேரளாவில் வேலைக்குச் சென்ற தொழிலாளரை தாக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும், அவர்களை ஏற்றிச் சொல்லும் ஜீப் ஓட்டுநர்களுக்கும் கம்பம் போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ஞானபண்டிதநேரு பொதுமக்களிடம் பேசுகையில், “கேரள தோட்ட வேலைக்கு தமிழகப் பகுதியிலிருந்து செல்லும் ஜீப்களில் ஆட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. அதேநேரம், மலைப்பாதைகளில் ஜிப் ஓட்டுநர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

மலைப்பாதைகளில் வாகனத்தை இயக்கும்போது அளவான வேகத்தில் மிதமாக இயக்க வேண்டும். இங்கே இருந்து அழைத்து செல்லும் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர வேண்டும். வாகனத்தை முறையாக பாரமரித்து அனைத்து விதமான சான்றிதழ்களையும் சரியாக வைத்து இருக்க வேண்டும்.

மேலும், அளவுக்கு அதிகமாக வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அவ்வாறு மீறி ஏற்றிச் சென்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்தார். சமீபத்தில், கேரள மாநிலத்தின் தமிழக ஜீப் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்முறை.. நன்னெறி வகுப்புகள் வன்முறையை வேரறுக்குமா? - கல்வியாளர்கள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.