தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள ஆட்டுப்பாறை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடந்த இரு தினங்களாக காணவில்லை. இதனையடுத்து இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவரது வீட்டில் சிறுமி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் ஸ்ரீராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க...வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது!