தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள இந்திரா காலணியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி(37). முத்துலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்து என்கிற அஜீத்குமாருக்கும்(21) திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு அத்தை – மருமகன் உறவு என்பதால் அவர்கள் பழகுவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதில் அஜீத்குமாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதையடுத்து இருவரும் தொடர்ந்து நெருங்கிப் பழகுவதை அறிந்த அஜீத்குமாரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் சசிக்குமாரின் வீட்டில் , முத்துலட்சுமியும் அஜீத்குமாரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இருவரும் மயக்கநிலையில் கிடப்பதை கண்ட முத்துலட்சுமியின் குழந்தைகள் அண்டை வீட்டாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் முன்னதாகவே இறந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.