ETV Bharat / state

மனைவியை வெட்டி படு கொலை செய்த கணவன் கைது! - Husband Arrested For Mudered His Wife

தேனி: மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து வேலைக்கு சென்ற மனைவியை வழிமறித்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைது  மனைவியை கொலை செய்த கணவன்  மனைவியின் நடத்தையியல் சந்தேகம்  Suspicion of wife's behavior  The husband who killed his wife  Husband Arrested For Mudered His Wife  Husband Arrested For Mudered His Wife In Theni
Husband Arrested For Mudered His Wife
author img

By

Published : Feb 18, 2021, 10:19 PM IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகேயுள்ள டி‌.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - முனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் விவசாயக் கூலித் தொழில் செய்து வருகின்றனர். முனியம்மாள் வேலைக்காக கேரளாவில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்று வருவது வழக்கம்.

இதனால், முனியம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சந்திரன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, அவரை கேரளாவிற்கு வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறியதாக தெரிகிறது. இன்று (பிப்.18) காலை வழக்கம் போல வேலைக்காக முனியம்மாள் ஜீப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்தது சென்று வழிமறித்த சந்திரன் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முனியம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தேவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியைக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.