கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத் தலங்கள் குமுளி, தேக்கடி. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான இங்கு ஆண்டு தோறும் வட மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதினால், அவர்களின் நேரம் விரயமாவதோடு, உடல் சோர்வும் ஏற்படுகிறது.
இந்நிலையில் குமுளி - மூணாறு சுற்றுலாத்தளங்களுக்கு இடையிலான ஹெலிகாப்டர் சேவையின் சோதனை ஓட்டம் நேற்று (செப்.03) தொடங்கியது. மேலும் குமுளியிலிருந்து அரை மணி நேரத்தில் மூணாறு செல்லும் விதமாக தொடங்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சேவைக்கு பயணக் கட்டணமாக 11 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா தொற்றுப் பரவலால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த சுற்றுலாத் தலங்களுக்கான தடை, தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் சூழலில், குமுளி - முணாறு இடையே ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 3பேர் கைது!