மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு - கேரளா எல்லையை இணைக்கும் திண்டுக்கல் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குமுளி மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்களும், பேருந்துகளும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில், இன்று காலையில் இருந்து குமுளி மலைச் சாலையான ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களும் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு, கேரளாவிற்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் கடும் குளிரினால் அவதிக்குள்ளாகினர்.