தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 126அடி ஆகும். கடந்த சில தினங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி ஓரிரு நாளில் முற்றிலும் நின்றது.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நேற்று பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 28மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அணைக்கு விநாடிக்கு 39 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது!