தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த 24ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவறிய அரசியல் பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக தேனி - பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார். ஓபிஎஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். ஹெச்.ராஜாவுடன் தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகளும் ஓபிஎஸின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு பிரதமர் வேட்பாளராக ஆசையிருந்தால் நிற்கட்டும் - குஷ்பு