ETV Bharat / state

25 நாள்களுக்குப் பிறகு மூதாட்டிக்கு கரோனா!

திருநெல்வேலி: ரயில் மூலம் பஞ்சாப்பிலிருந்து நெல்லை திரும்பிய மூதாட்டிக்கு 25 நாள்களுக்குப் பிறகு, கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ே்ே
்ே்
author img

By

Published : Apr 17, 2020, 6:19 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 58 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நெல்லை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 64 வயது மூதாட்டிக்கு 25 நாள்கள் கழித்து கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த மாதம் தனது சகோதரியின் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பஞ்சாப் சென்றுவிட்டு, ரயில் மூலம் நெல்லை திரும்பியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, 14 நாட்கள் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த 14 நாள்களில் வைரஸ் அறிகுறி இல்லாததால், அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், அக்கம்பக்கத்தினருடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மூதாட்டிக்கு 25 நாள்களுக்குப் பிறகு கரோனா

பின்னர், 25 நாட்களுக்குப் பிறகு கரோனா அறிகுறிகள் மூதாட்டிக்கு தென்பட்டதால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மூதாட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூதாட்டியின் மகன், பஞ்சாப் சென்ற சகோதரியின் மகள் ஆகியோருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லாதது உறுதியானது. தற்போது, சுகாதாரத் துறை அலுவலர்கள் அப்பகுதி உள்ள மக்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

வழக்கமாக 14 நாள்களில் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்படும் என்கிற அடிப்படையிலேயே வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். ஆனால், நெல்லையைச் சேர்ந்த மூதாட்டிக்கு 25 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்பட்டு கரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது மருத்துவர்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.