ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவால் அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம் - நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை

தேனி: பெரியகுளம் அருகே ஊரடங்கு உத்தரவால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்து திறந்தவெளியில் கிடக்கின்றன.

Rice bundles
Rice bundles
author img

By

Published : Apr 6, 2020, 8:27 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செங்குளத்துப்ட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்தனர். கடந்த மாத தொடக்கத்தில் இருந்து அறுவடை பணிகள் நடைபெற்ற நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர்.

மேல்மங்கலம், ஜெயமங்கலம், செங்குளத்துப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மதுரையில் உள்ள நெல் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்
திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்

சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாத நிலையில் திறந்த வெளியில் உள்ளன. பெரியகுளம் பகுதியில் கோடை மழை பெய்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் சேதம் அடையும் நிலை எழுந்துள்ளது. எனவே நெல் மூட்டைகளைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.