தேனி மாவட்டம் ஒட்டுகுளம் பகுதியிலுள்ள செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, தனது ஆடு ஒன்று காணாமல்போனதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளார்.
அப்போது குளத்தின் அருகே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய நிலையில் படுத்திருந்ததைக் கண்டு அவர் பீதி அடைந்துள்ளார். உடனே இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர், 12 நீடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஆட்டை வெளியில் எடுத்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்!